யார் இந்த ராகு கேது ?

ராகு, கேது, தோஷம் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னதாக, இவர்களைப்பற்றிய சில விவரத்தை இங்கு அறிந்து கொள்வோம். முதலில் சில சுருக்கமான புராண தகவல்கள் தெரிந்து கொள்வோம். ஆதிபராசக்தி தேவியை வழிபாடு செய்து தரிசனம் செய்த துர்வாச முனிவருக்கு அம்பாள் முன்னே தோன்றினாள். வேண்டும் வரம் கேள் என்றவுடன் முனிவர் தனக்கு எந்த தேவைகளும் இல்லை தங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றதும் அம்பாள் மகிழ்ந்து தன் கழுத்தில் இருந்த பூமாலையை அவருக்கு கொடுத்து ஆசிர்வதித்து அனுப்பினாள். இந்த பூமாலையுடன் வந்த முனிவர் அதை இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் கர்வமாக அதை பெற்று தன்னுடைய யானையின் கழுத்தில் அனுவித்தான். கடும் சினம் கொண்ட முனிவர் தேவ குலத்தில் பிறந்து அமரர் என்று பெயர் உடைய நீயும் உன் குலத்தவர் அனைவரும் இனி அரக்க ஜென்மமாக மாறி விடுவிர்கள் என்று சபித்தவுடன் இந்திரன் அமரர் தன்மையை இழந்து முனிவரின் சாபத்தை அடைந்தான். இந்திராணி பயந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டு தன் கணவன் செய்த குற்றத்துக்கு இந்திரனுக்கு மன்னிப்பு கொடுத்து மீண்டும் அமரனாக வேண்டும் என்றாள். முனிவர் அமிர்தம் உண்டால் மீண்டு...