பரதன் என்ற நேர்மையாளன்

பரதன் என்ற நேர்மையாளன்

இராமாணயத்தில் , இராமர் சீதையைத் தவிர மூன்று முக்கியமானப் பாத்திரங்களைக் கூறுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டால் சற்றும் யோசிக்காமல் நாம் சொல்லும் பெயர்கள் லஷ்மணன் , அனுமன் , ராவணன் ஆகிய மூவருமாகத்தான் இருக்கும். அனால் இவர்கள் மூன்று பேரையும் விட மிக முக்கியமான ஒருவர் இருக்கிறார். அவர்தான் கைகேகியின் புதல்வர் பரதன். இராமாயணக்கதையில் ஒரு சிறிய பகுதியில் மட்டும் பரதன் வந்தாலும் , தனது நேர்மையான நடத்தையின் மூலம் இராமாயணத்தின் முக்கியமானப் பாத்திரமாய் நின்று விடுவது பரதனே என்பது யோசிக்கும் பொழுது நமக்கு புரிய வரும்.

 வெகுசுலபமாக அயோத்தியை ஆளக்கூடிய வாய்ப்பினை பரதனின் தாய் பரதனுக்கு வாங்கித் தந்திருக்கிறான். அனால் வழக்கமாய் அரச பரம்பரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருமாம் வழக்கினை மீறிவிட்டு , தானே நாட்டுக்கு அரசனாக வேண்டும் , தன் சகோதரனுக்குரிய உரிமையைத் தட்டி பறிக்க வேண்டும் என்ற ஆசை அணுவளவும் அவனது நெஞ்சில் எழவில்லை. தாய் செய்தது , ஏற்றுக் கொள்ள முடியாத கொடிய செயல் என்பதை உணர்ந்ததால் , ஏற்பட்ட சின்னத்தில் கைகேகியைப் பார்த்துக் கூறுகிறான் , “உன்னை தாயாகவே என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. அண்ணன் மேல் நான் எவ்வளவு பாசம் வைத்திருந்தேன் என்பது உனக்குத் தெரியாதா? அவனை காட்டிற்கு அனுப்பிவிட்டு எனக்கு பட்டம் சூட்ட வேண்டும் என்கிற மனம் எப்படி உனக்கு வந்தது? நீ கொலை பாதகி , நரகத்துக்குத்தான் போவாய்” என்று தாயினும் பாராமல் கடுமையான மொழிகளை பேசுகிறான்.

கானகம் சென்று இராமரைப் பணித்து , அயோத்தி திரும்பி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கண்ணீர் விட்டு கலங்குகிறான். 'தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவது என் கடமை , அதை ஒருக்காலும் மீரா முடியாது , நீ அயோத்தியை ஆட்சி செய்' என்று இராமர் கூறியபோது , 'அண்ணா! தந்தையை இழந்த எனக்கு நீயே இப்பொது தந்தை! என் தெய்வமும் நீதான் , நீ கூறியபடி செய்கிறேன். பதினான்கு ஆண்டுகள் களைத்து நீ திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் , இல்லையேல் தீக்குளித்து உயிர் துறப்பேன் , இது உறுதி என்று கூறி , இராமரை வணங்கி , அவரது பாத அணிகளை கேட்டு வாங்கி , அதை தலைமேல் வைத்துக் கொண்டு வந்து , அரியாசனத்தில் வைத்து , இராமர் அங்கு இருந்து ஆதிசி செய்வதாய் நினைத்து அந்த பாத அணிக்கு மரியாதை செலுத்தி வருகிறான்.

பதினான்கு ஆண்டு காலமும் , அரியணையில் அமராமல் , அயோத்தி அருகே உள்ள நந்திகிராமத்தில் , ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்கிறான். பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்து பதினைந்தாம் ஆண்டு பிறக்கிறது. இராமர் வரவில்லை. தீ மூட்டி உயிர் துறக்கும் ஏற்பாடுகளை செய்கிறான். அனால் இராமர் அனுப்பிய அனுமன் வந்து , இராமர் திரும்பி வரும் செய்தியைச் சொல்லி பரதனது உயிரைக் காப்பாற்றுகிறார். பரதன் அண்ணன் மேல் பாசம் பொழிவதில் லஷ்மணனை நாம் எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது.

 இறுதிவரை இராமனின் நிழல் போலிருந்து அவருக்கு சேவையாறியவன் லஷ்மணன். அனால் இராமனின் அருகில் இல்லாமலேயே அண்ணன் மேல் பாசம் கொண்டு , அதை உலகே அறியுமாறு வாழ்ந்து காட்டியவன் பரதன். அண்ணனின் நினைவிலேயே , அவனுக்காக அயோத்தியை நிர்வாகம் செய்து வந்தவன் பரதன். காட்டில் வாழ்ந்த லஷ்மணன் மரவுறிதரித்து வாழ்ந்ததிற்கு காரணம் இருக்கிறது. அனால் அரண்மனையில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டே நாட்டை நிர்வாகம் செய்யும் வாய்க்குகள் இருந்தும் , அவற்றை உதறித் தள்ளிவிட்டு , தவ வாழ்க்கை வாழ்ந்தவன் பரதன்.

இராமன் தன் வாயாலேயே , 'ஊரில் எத்தனையோ தாய்க்கு பிறந்த உடன் பிறந்த அன்ணன் தம்பிகள் பாசத்தோடு ஒற்றுமையாக வாழலாம். ஆனாலும் பரதனை போன்ற உத்தமனை நான் பார்த்ததில்லை' என்று பரதனைப் புகழ்ந்துக் கூறுவதிலிருந்து பரதனின் சிறப்பை நாம் உணரமுடிகிறது. இராமனின் தாய் கோசலை , பரதனை பார்த்து , பரதா! உலகில் கோடி இராமர் இருக்கலாம் , அவர்கள் கூட உன் குணத்திற்கு ஈடாக மாட்டார்கள் என்று தன் வாயாலேயே அவனைப் புகழ்கிறாள். 'இவன் பெயர் பரதன் , அழகிலும் குணத்திலும் இராமருக்கு இணையானவன்' என்று , மிதிலையில் பரதனை ஜனகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்து , விசுவாமித்திரர் கூறும் கூற்று சிறிதும் மிகைப்பட்டதல்ல என்பதை , பின்னாளில் பரதனின் நடத்தையிலிருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

 அண்ணன் மேல் பரதன் கொண்ட பாசத்தையும் மீறிய பக்தி , அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாத அருங்குணம் , பழிபாவத்திற்கு அஞ்சும் இதயம் இவையாவும் பரதன் என்ற பாத்திரத்தை இராமாயணக் கதையில் மிக உயரமான இடத்தில உட்காரவைத்து விட்டது என்றேக் கூற வேண்டும். 

அபூர்வாஸ்

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்