சமூகவியலின் தந்தை- Isidore Marie Auguste François Xavier Comte
ஆரம்ப காலத்தில் சமூகத்தை எண்ணக்கருக்களினடியாகவே நோக்கினர். சமூகவியலின் தந்தையான comte இன் தோற்றத்துக்கு பின்னர் இந் நிலை மாறியது. சமூகத்தின் பொருண்மைகளை அறிய ஓர் அளவையினத தேவையை உணர்ந்த கொம்ற்,
- உற்றுநோக்கல்
- பரிசோதனை
- ஒப்பிடல்
- வரலாற்று முறை
போன்ற முறையியல்களை உள்ளடக்கிய கோட்பாட்டை உருவாக்கினார். இதனைத் தொடர்ந்து இக்கோட்பாடுகள் பலவாறு வளர்ச்சி பெற்றன. பாரிய விருத்திக்கு பின்வரும் இரு விசைகள் காரணமாக அமைந்தன.
- புலமை சார்ந்த விசைகள்
- சமூகம் சார்ந்த விசைகள்
புலமைசார்ந்த விசைகள் எனும்போது சிக்காக்கோ கார்வேட் பிராங்போர்ட் சிந்தனா கூட்டங்களின் எழுச்சியினைக் குறிப்பிடலாம்.
சமூகம் சார்ந்த வசைகள் எனும்போது அரசியல் புரட்சி,கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட முதலாளித்துவத்தின் எழுச்சி, பொதுவுடமைத்தத்துவத்தின் எழுச்சி, நகரமயமாக்கம், சமயரீதியிலான மாற்றங்கள், விஞ்ஞானத்தின் வளர்ச்சி, நாடுகாண் பயணங்களின் விரிவு, அறிவெழுச்சிக்கால சிந்தனைகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சமூகம் சார் வசையான கைத்தொழிற்புரட்சியினால் நகரமயமாக்கம் ஏற்பட்டது. கிராமங்களில் இருந்து வெலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்காக பாரியளவு தொழிலாளர்கள் இடம்பெயர்ந்தார்கள்.இதனால் அங்கு முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது. நகரமயமாக்கத்தின் உச்ச வளர்ச்சியினால் அங்கு நோய் நிலை ஏற்படுகின்றது. இடநெருக்கட் அதிகாரப்பகிர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதனைப் பற்றி சமூகவியளாளர்கள் ஆராயும்போது அங்கு சமூகவியல் கோட்பாடு தோற்றம் பெறுகிறது.
சமூகவியல் கோட்பாடுகள் வெவ்வேறு வகைகளில் காணப்படும் போதும் அதனை சிலர்
- ஒறுங்கிணைவுக் கோட்பாடு
- முரண்பாட்டுக் கோட்பாடு
- குறியீட்டு இடைவினையியல் கோட்பாடு
என வகைப்படுத்துவர்.
குறித்த காலங்களில் குறித்த பிரதேசங்களில் மையங்கொண்டிருந்த கோட்பாடுகள் பல சமகாலத்தில் பல மாற்றங்களை பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக.... ஜரோப்பாவில் மையம் கொண்டிருந்த குறியீட்டு இடைவினையியல் கோட்பாடானது பண்பாடு, பண்பாட்டிடைத்தொடர்பு, உளச்சார்பு என்பன வளரத்தொடங்கி பின்னர் சிக்காக்கோ குழுமத்திலிருந்து வளர்ச்சி பெற்று வரகின்றது.
பிராங்பொர்ட் குழுமம் விமர்சனக் கோட்பாட்டையும், கார்போட் குழுமம் அமைப்புத் தொழிற்பாட்டு வாதத்தினையும் குறித்து நிற்கின்றது.
தொல்சீர் மரபினையடுத்த நவீன சமூகவியல் கோட்பாட்டு மரபில் பிரதானம் பெறும் குழுமங்களாக...
ஆரம்ப கால அமெரிக்க சமூகவியல் கோட்பாடுகள்
இதனுள் சமூக மாற்றம் பண்பாட்டிடை ஆய்வுகள் என்பவற்றை முதன்மைப் படுத்தி தோன்றிய நடத்தைவாதம் இடைவினையியல் கோட்பாடு என்பவற்றை மையப்படுத்திய கோட்பாடுகள் வளர்ச்சி அடைந்தன.
நவீனயுக மத்திய காலப்பகதியில் உருவான கோட்பாடுகள்
கார்போட் குழுமத்தின் அமைப்புத் தொழிற்பாட்டுவாதம், மார்க்சிய கோட்பாட்டு விருத்தி karl mankheim முன்வைத்த அறிவின் சமூகவியல் பற்றிய கோட்பாட்டின் வளர்ச்சி என்பன இதனுள் அடங்குகின்றன.
இவ்வாறாக சமூகவியல் கோட்பாட்டின் உருவாக்கத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
Comments
Post a Comment