நான்கு மெழுகு வர்த்திகள்


ஒரு  இருட்டறை. நான்கு  மெழுகு  வர்த்திகள் 
பிரகாசமாய் எரிந்து கொண்டு, ஒன்றோடொன்று 
பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும்  மகிழ் 
வுடன்  இருந்தன.   அப்போது  ஜன்னல்  வழியே 
காற்று  வீசியது. 

அப்போது  அமைதி  என்ற முதலாவது  மெழுகு 
வர்த்தி  " ஐயோ! காற்று  வீசுகிறதே!  நான் 
அணைந்து விடப்  போகிறேன் !" என்ற  பயத்தில் 
அது  அணைந்து விட்டது.  அன்பு  என்ற  இரண் 
டாவது  மெழுகுவர்த்தியும்  பலவீனம்  காரண 
மாக  அணைந்து விட்டது.   சோகம்  காரணமாக 
அறிவு என்ற மூன்றாவது மெழுகு வர்த்தியும் 
அணைந்து விட்டது. 

இந்த  அனைத்தையும்  பார்த்துக் கொண்டிருந்த 
நான்காவது  மெழுகுவர்த்தி  சிறிது  நேரம் 
காற்றுடன்  போராடியது.  இதுவும்  சில நிமிடங் 
கள் தான். காற்றின்  வேகம்  கொஞ்சம் 
குறைந்த உடன் மெழுகுவர்த்தி  பிரகாசமாய்
எரிய ஆரம்பித்தது. 
அப்போது  அந்த  அறைக்குள்  நுழைந்த சிறுவன் 
மூன்று  மெழுகுவர்த்திகள் அணைந்து  இருப் 
பதைக் கண்டான்.    " கவலைப்படாதே! என்னை 
வைத்து  மற்ற  மூன்றையும்  பற்ற  வை! " என்றது 
நான்காவது மெழுகுவர்த்தி. " நீ யார்?" என்று 
சிறுவன்  கேட்க,  " நம்பிக்கை " என்று  கூறியது 
நான்காவது மெழுகுவர்த்தி .

வாழ்க்கையும்  இப்படித்தான்.   நம்பிக்கையுடன் 
போராடினால்  எளிதில்  வெற்றி பெறலாம். 

இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்