முடகத்தான் கீரையில் தோசை
நீங்கள் மூட்டு வலி மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டால், இந்த முடக்கத்தான் கீரை சாப்பிடுவது நல்லது. மேலும் இந்த முடகத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்முடக்கத்தான் கீரை – 2 கப் புழுங்கல் அரிசி – 1 கப் உளுந்து – 1 டீஸ்பூன்வெந்தயம் – 1 டீஸ்பூன் துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை: முதலில் அரிசி, உளுந்து, வெந்தயம், துவரம்பருப்பு போன்றவற்றை ஒன்றாக சேர்த்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இவற்றை அரைத்துக் கொண்டிருக்கும்போதே நன்கு சுத்தம் செய்து நறுக்கிய முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.இதன் பிறகு, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். இதை 7 மணி நேரம் புளிக்க வைத்துக்கொள்ளவும். மாவு தோசைக்கு தயாரானதும், தோசை கல்லில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மாவு விட்டு, ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
Comments
Post a Comment