உத்தரகோசமங்கை...


SPIRITUAL SURPRISES - 85 - ஆன்மீக ஆச்சரியங்கள்
------------------------------------------------------------
------------------------------------------------------------
சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். 

உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் 
இது என்று கூறப்படுகிறது. 

‘மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது’ என்பார்கள். 

ஆதி காலத்தில்... 
அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே 
இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, 
இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

ராமநாதபுரம் அருகே உள்ளது புண்ணியதலமான உத்தரகோசமங்கை. இக்கோசமங்கை கோவிலில் 
மங்களநாதர், மங்களநாயகி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
-------------------------------------------------------------------
Uthirakosamangai (Tamil: உத்திரகோசமங்கை):
திருஉத்தரகோசமங்கை-^-ஈசன் ஈஸ்வரி-^-
-------------------------------------------------------------------
திருஉத்தரகோசமங்கை (உத்திரகோசமங்கை). 
இறைவர் திருப்பெயர்: மங்களேசுவரர், மங்களநாதர், 
காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர்.

சுயம்பு மூர்த்தி

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது. 

மங்களநாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும். மங்களேஸ்வரி அம்பாளுக்கு நான்கு திருக்கரங்கள். இந்த அம்மனை ஐந்து செவ்வாய்க்கிழமைகள் ராகுகால வேளையில், எலுமிச்சை பழ தீபமேற்றி, ஒன்பது எலுமிச்சைப் பழங்களை உதிரியாக அன்னையின் காலடியில் சமர்ப்பித்து வந்தால், செவ்வாய்தோஷம் நிவர்த்தி ஆகும். திருமணத் தடை அகலும்.

மாணிக்கவாசகர் இத்தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார். ‘நீத்தல் விண்ணப்பம்’ என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

நாகதோஷம் நீக்கும் தலம்

வேத வியாசர், காகபுஜண்டர், மிருகண்டு, மயன் முதலியோர் இத்தல ஈசனை வணங்கி பேறு பெற்றுள்ளனர். இங்கு ஸ்படிக லிங்கம், மரகத லிங்கம் உள்ளன. தினந்தோறும் இந்த லிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. வள்ளி– தெய்வானை சமேத முருகப்பெருமான், ஆறுமுகங்களுடனும், பன்னிரு கைகளுடனும் மயில் மீது அமர்ந்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மயில், பாம்பை தன் கால்களினால் பிடித்து வைத்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர் இந்த முருகப்பெருமான் ஆவார். தொடர்ச்சியாக 6 வாரங்கள் செவ்வாய்க்கிழமை ராகு காலங்களில் இத்தல விநாயகர், ஈசன், அம்பாள், முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நாகதோஷங்கள் அகலும் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது. பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள். மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

ஆதி சிதம்பரம்

இத்தலம் ‘ஆதி சிதம்பரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. அம்பிகைக்காக இங்கு அறையில் ஆடிய திருத்தாண்டவத்தை தான் நடராஜபெருமான், தில்லை அம்பலத்தில் முனிவர்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் ஆடுகிறார். எனவே இந்த ஆலயத்தில் உள்ள நடராஜர்தான், ஆதி நடராஜர் என்றும் கூறப்படுகிறது. நடராஜ பெருமாள் ஐந்தரை அடி உயரம். முழுவதும் மரகத திருமேனி. ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரை அன்று மட்டுமே சந்தனம் களையப்பட்டு அபிஷேகம் நடைபெறும். அதுவும் 32 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்படும். ஆருத்ரா தினமான அன்று மட்டுமே, நடராஜரை மரகதக் கோலத்தில் கண்டுகளிக்கலாம்.

அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு மீண்டும் சந்தனக் காப்பு செய்யப்பட்டு, நடராஜர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சூரிய உதயத்திற்கு முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்தச் சந்தனக் காப்பிலேயே அடுத்த மார்கழி திருவாதிரை வரை நடராஜப் பெருமாள் காட்சி தருவார். நடராஜர் கோவிலுக்கு பக்கத்தில் தனியே சகஸ்ர லிங்கம் உள்ளது. மூலத் திருமேனியில் நெடுக்குக் கீற்றுகள் உள்ளன. சகஸ்ர எண்ணிக்கையில் உட்புறத்தில் தல மரமான இலந்தை மரத்தின் வேரூன்றி உள்ளது.

ஆலயத்திற்குள் மங்கள, அக்னி தீர்த்தங்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம், மொய்யார் தடம் பொய்கைத் தீர்த்தம், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் ஆகியவை இருக்கின்றன. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர். முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம். ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலான உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது. இந்த சிறப்பு இக்கோவிலுக்கு மட்டுமே உரித்தானது.

இங்குள்ள மங்களநாதரையும், மங்களநாயகியான மங்களாம்பிகையையும் காலையில் 5 முறை வலம் வந்து வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் யாவும் நீங்கும். நண்பகலில் 5 முறை வலம் வந்து வழிபட்டால் இப்பிறவி பாவங்கள் யாவும் மொத்தமாய் அகலும். மாலையில் 5 முறை வலம் வந்து வழிபாடு செய்தால், ஆயுள் கூடும். நோய்கள் தீரும். செல்வம் பெருகும். தொழில் மேன்மையுறும். இவ்வாலய உமாமகேஸ்வரர் சன்னிதியில் வழிபாடு செய்யும் தம்பதியர்களின் ஒற்றுமை பலப்படும்.

பைரவர் வழிபாடு

இரட்டை கால பைரவர் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். நான்கு திருக்கரங்கள், ஒரு பைரவரின் இடையில் மிகப்பெரிய தண்டம் உள்ளது. இவரை அஷ்டமியில் மட்டுமல்ல அனைத்து நாட்களில் வழிபட்டாலும், இன்னல்களை தீர்த்தருள்வார். இத்தல சிவபெருமானை வழிபட்டதன் காரணமாக, பிரம்மதேவரின் கோப குணம் விலகியது. கோபம் அகல இத்தல ஈசனை வேண்டி தியானம் செய்தால் போதுமானது. எல்லா சிவாலயங்களிலும் அர்த்த ஜாம பூஜையின்போது பாடக்கூடிய ‘திருப்போன்னூஞ்சல்’ பாடல், திருஉத்திரகோசமங்கை திருத்தலத்தில் தோன்றியது என்பது இவ்வாலயத்தின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாகும்.

மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் பரமக்குடி, சத்திரக்குடி ஊர்களைத் தாண்டினால் வலதுபுறத்தில் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலை வரும். இந்த சாலையில்தான் உத்திரகோசமங்கை திருத்தலம் அமைந்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

சிவ பூஜையில் தாழம்பூ

சிவபெருமானுக்கு, இத்தலத்தில் மட்டுமே தாழம்பூ சாத்தப்படுகிறது. ஈசனின் அடிமுடியைக் காண விஷ்ணுவும், பிரம்மாவும் சென்றபோது, சிவபெருமானின் திருவடியைக் காண முடியவில்லை என்பதை விஷ்ணு ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவர், சிவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் கூறினார். 

இதனால் தாழம்பூவை சிவபூஜையில் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், பிரம்மனுக்கு பூலோகத்தில் ஆலயங்கள் இருக்காது என்றும் சிவபெருமான் சாபமிட்டார். இதையடுத்து மனம் வருந்திய பிரம்மதேவரும், தாழம்பூவும் ஈசனை வேண்டி இத்தலத்தில் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர். எனவேதான் தாழம்பூ இத்தல ஈசனுக்கு சாத்தப்படுவதாக தல புராணம் கூறப்படுகிறது.
----------------------------------------------------------------------------
உத்திரகோசமங்கை -^- பச்சை மரகத நடராஜர் -^-
-----------------------------------------------------------------------------
உத்தரகோசமங்கை கோவிலில் - மரகத நடராஜர் :

இங்கு நடராஜருக்கு தனிசன்னதி அமைந்துள்ளது. 
இந்த சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான 
அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

இந்தப் பழமையான மரகத நடராஜர் சிலையின் சிறப்பு அது முழுமையும் மரகதத்தால் செய்யப்பட்டிருப்பது தான்.

இங்குள்ள நடத்தரயர் சிலை வித்தியாசமானது.
பொதுவாக எல்லா ஆடலரசன் சிலைகளிலும் இடக்கால் தூக்கிய படி ( குஞ்சிதபாதம்)
அந்தரத்தே நிற்கும். வலது காலில்தான்
முயலக்க் குறும்பனை நசுக்கிக் கொண்டிருப்பார். 
( மதுரையில் கால் மாறி ஆடியநிலை தவிர )
ஆனால் இங்கோ தூக்கிய திருவடி
தன் நுனி வாலால் நட்டமாக நிற்கும்
பாம்பின் தலைப் படத்தில் வைத்திருப்பது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது….
உலகில் வேறு எங்கும் எந்தச் சிற்பியும் 
வடியாத வகை இது.

 “மத்தளம் முழங்க மரகதம் உடைபடும்” என்பதால் 
ஒளி-ஒலி அதிர்வுகளில் இருந்து காப்பதற்காக மரகத நடராஜர் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தனக்காப்பு பூசப்பட்டிருக்கும். 

வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்த நாளான திருவாதிரைக்கு முதல்நாள் இந்த சந்தனக் காப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு 
வைக்கப்படுவது வழக்கம். 

 இதைத் தொடர்ந்து மரகத நடராஜருக்கு 
சந்தனாதி, நெய், பால், தயிர், தேன், மஞ்சள், நெல்லிப்பொடி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 
32 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். 

ஆருத்ரா தரிசனத்தையொட்டி அபூர்வ மரகத நடராஜரின் மீது மீண்டும் சந்தனக்காப்பு பூசப்படுகிறது. தொடர்ந்து நடராஜருக்கு பல்வேறு ஆராதனைகள் நடத்தப்படும். 

அபூர்வ மரகத நடராஜரின் திருமேனியில் ஆண்டு முழுவதும் பூசப்பட்டிருக்கும் சந்தனம் மருத்துவகுணம் மிகுந்தது என கருதப்படுவதால் களையப்பட்ட இந்த சந்தனத்தை பக்தர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு விலை கொடுத்து வாங்கிச் செல்வர் !
-----------------------------------------------------
திருவிளையாடற் புராண காலம் :
வலை வீசி விளையாண்ட படலம் 
-----------------------------------------------------
இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.
அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…இப்போது நமக்கு 
அருள் பாலிக்கும் அம்மன்.

அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை
அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார்.
-------------------------------------------
உத்திரம் என்பது உபதேசம்
கோசம் என்பது இரகசியம் 
அதாவது பிரணவ மந்திரம்
மங்கைக்கு உபதேசித்ததால் 
இந்த இடம்...
உத்தர கோசமங்கை ஆனது.
---------------------------------------------
இதுதான் கோவில் உருவான வரலாறு.

என்னே இதன் தொன்மை !

உருவாகிய காலம் குமரிக் கண்டக் காலம்
இன்னும் துல்லியமாகச் சொல்லப் போனால்
மீனாட்சி மலயத் துவசன் காலத்துக்கும் முந்தி
இங்குள்ள ஓதுவா மூர்த்திகளைப் பேட்டி கண்ட பொழுது இந்தக் கோவில் மனுச் சக்கரவரத்தி காலத்தில் கட்டப் பட்டது. 

இங்கே இங்கே இப்போது கோவில் வாசல் 
உள்ள இடத்தில்தான கடல் இருந்தது.
இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது !

இங்கு மூன்று மூர்த்தங்கள்….
மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான்
மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை
தீர்த்தமும் இங்கே பச்சை
விருட்சமும் இங்கே பச்சை
என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்…..
மண் முந்தியோ இல்லை மங்கை முந்தியோ என்னும்
சொல்வழக்கே ஊரின் பழைமையைப் பறை சாற்றும்…

மகா பாரதப் போர் 
5100 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. (கிமு 3100)
அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது.
அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது
அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்
இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து 
வணங்கிச் சென்றிருக்கிறான்..
இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்….
இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி
இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே
மங்களேச்சுவரர் சன்னதியில்தான் நடந்ததாம்.
மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.

மாணிக்கவாசகரின் வரிகளில் இந்த புகழ் பெற்ற கோவிலை பற்றிய குறிப்புகள் உள்ளன. 
இங்குள்ள ஆடல் வல்லான் வடிவம் ஏற்படுத்தப் பட்டதே மணிவாசகருக்குத்தான் எனக்கூறுவர் !

கோவிலின் விஸ்தீரணம் 18 ஏக்கர்.
இதில் தெப்பக்குளம் மட்டும் 4 ஏக்கர்.

சேது மாதவ தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் மற்றும் இராமநாதபுரம் போலவே இந்த புனிதத்தலமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் ஆருத்ரா திருவிழா மிகவும் புகழ் பெற்றது. இந்த காலகட்டத்தில் தான் பெரும்பாலான சிவ பக்தர்கள் இங்கு வந்திருந்து, கடவுளின் அருள் பெற்று வருகிறார்கள். 

இந்த கோவிலை 
பரமக்குடி மற்றும் இராமநாதபுரத்திலிருந்து 
எளிதில் அடைய முடியும்.
-------------------------------------------------------------------
Uthirakosamangai Siva Temple, Ramanathapuram : 
-------------------------------------------------------------------
Uthirakosamangai Siva temple is an ancient temple where presiding deity is carved in Emerald. Shastralingam can be found at this temple. Annual Arudhra festival attracts a large number of devotees. This video includes interview with two priests of the temple. This temple is glorifies by the songs of Saiva saints Manciavasagar and Arunagirinathar.

This Shaiva temple is situated near Ramanathapuram in the Ramanathapuram district of Tamil Nadu. The temple is believed to be built by the Panyda kings, Achutappa Nayak (1529–1542 A.D.), a Hindu ruler of Thanjavur, Muthuveerappar and other kings of Ramanthapuram districtSethupathy dynasty at various times.

The temple houses a 6 ft (1.8 m) tall ancient maragatha Nataraja idol carved out of emerald, being the one of its kind. 

The temple is considered sacred along the lines of Ramanathapuram, Sethu Madhava Theertham and 
Lakshmana Theertham.

The temple has numerous shrines, with those of Mangalanathar, Mangalambigai and Natarajar being the most prominent. 

The temple has six daily rituals at various times from 5:30 a.m. 
to 8 p.m., and six yearly festivals on its calendar. 

The temple is maintained and administered by the Hindu 
Religious & Endowment Board of the Government of Tamil Nadu. 

The temple has been glorified by the hymns of 9th-century 
saint Manickavasagar and 15th-century saint Arunagirinathar.

The Mangalanathaswamy Temple at Thiru Uthirakosamangai 
is considered the Kasi of the south. The ‘sthala virutcham’ in 
the temple is about 3,300 years old and this was proved in a 
research conducted by the State government.
------------------------------------------------------
மேலும் விவரமாக...Further in Detail :
1
2
--------------------------------------------
கீழுள்ள கானொளி காண்க :
Video for உத்திரகோசமங்கை▶ 1:03
--------------
படங்கள் :
--------------
1  
உத்திரகோசமங்கை தகவல் - Uttarakocamankai in News 
2  
ஆருத்ரா-நேத்ரநடராஜர் - arutra(vision)Nataraja 
3  
உத்திரகோசமங்கை கோவில்  - Uttarakocamankai Temple

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

அன்னம்+காவடி+ஆட்டம்