‘ஒரு பெரியார் போதாது’ – சொன்னவர் கிருபானந்த வாரியார்?

‘ஒரு பெரியார் போதாது’ – சொன்னவர் கிருபானந்த வாரியார்?

அதனால் தான் அவர் பெரியார். பிறருடைய துன்பத்தை யார் எண்ணுகிறார்களோ, அவங்க தானே பெரியவங்க. நாங்கள் கடவுளை ஒப்புக் கொள்கிறோம் என்பதைத் தவிர, எனக்கும் பெரியார் கருத்துகளுக்கு வேறு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. பெரியார் சொல்லும் ஒன்று கூட நடுநிலையான ஆன்மீகவாதிகளுக்கு எதிரானது அல்ல.

பெரியாரின் குடியரசு பத்திரிக்கையை தொடங்கி வைக்க வந்தவர் திருப்பாதிரிபுலியூர் ஞானியார் சுவாமிகள். அப்போது பேசிய ஞானியார் சுவாமிகள், “நாங்கள் ஆன்மீகத்தில் மண்டிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை துடைத்தெரிய மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறோம். களத்திலே சந்தித்து துடைத்தெரிய வந்துள்ள ஒரே பெரியவர் பெரியார் தான்,” என்று குறிப்பிட்டார்.

நான் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பேரன். அவர்  “தமிழ்நாட்டை சீர்திருத்த ஒரு பெரியார் போதாது. பல்லாயிரக்கணக்கான பெரியார்கள் வேண்டும்,” என்று சொல்லுவார். என்னிடம் பல தடவை கிருபானந்த வாரியார் சுவாமிகள் இதைச் சொல்லியிருக்கிறார்கள்

ஆத்திகர்களாக இருப்பவர்கள், நான் உட்பட ரொம்ப சாதுவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லா அநீதிகளும் தெரியும். ஆனால் ‘எல்லாம் அவன் செயல்’ என்று அமைதியாக இருந்து விடுவார்கள். பெரியார் தான் எல்லாம் சிவன் செயல் அல்ல, எல்லாம் “அவன்” செயல் என்று சொன்னார்கள்.

யார் தெரியுதா?. எல்லாம் அவன் செயல். விடாதே, விடாதே என்று நம்மையெல்லாம் உந்தித் தள்ளியவர் பெரியார்’” என்று மு.பெ.சத்தியவேல் முருகனார் பேசியுள்ளார். 

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்