கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil)
கில்லு பாத்திரம் (killu paathiram recipe in tamil)
தேவையான பொருட்கள்
2 பரிமாறுவது
1/2கப் இட்லி புழுங்கல் அரிசி மாவு
1/2கப் துவரம் பருப்பு
10பூண்டு
5காய்ந்த மிளகாய்
1/2டீஸ்பூன் கடுகு
1டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
1 கொத்து கருவேப்பிலை
சிறிது உப்பு
1 சிட்டிகை பெருங்காயம்
மஞ்சள் தூள்
இட்லி புழுங்கல் அரிசியை ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த மாவை ஊத்தாப்பம் போல் தோசை ஊற்றி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் மிக்சியில் அல்லது அம்மியில் அரைத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்த பூண்டு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து உப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்த்து கெட்டியாக கொதிக்க விடவும்.
நன்கு கொதி வந்ததும் வெட்டிய துண்டுகளை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான கில்லு பாத்திரம் ரெடி.
Comments
Post a Comment