விஞ்ஞானமும் மெய்ஞானமும்
***********************************
ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம்
பேதமது ஆகிப் புணரும் பராபரை
என்று திருமந்திரம் சொல்கிறது.
வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
என்று இந்த வெட்ட வெளியாகிய
பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர்
குறிப்பிடுகிறார்.
உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட வர்கம் பெருகி, மனிதன் சிந்திக்க கற்றுகொண்ட காலம் முதலாக மனித அறிவு வளர்ந்து வந்து
இருக்கிறது. இந்த அறிவின் வளர்ச்சி
காரணமாகவே; இன்றய அறிவியல்
புதுமைகளும், கலைப்புதுமைகளும்,
இலக்கிய இலக்கணங்களும் வளர்ந்து நின்று மானுட வாழ்வை மிளிரச் செய்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்துக்கும் அடிப்படை மனிதன் பெற்றுக் கொண்ட அறிவின் முதிர்ச்சியே ஆகும்.
அறிவு என்பது அறிந்து வைத்துக்
கொள்ளுவது என பொருள்படுகிறது. அறிந்து கொள்ளுவதாகிய இந்த அறிவு, ஞானம் என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. இந்த அறிவாகிய ஞானம், இரண்டு வகையாக
சான்றோர்களால் பிரித்துப் பார்க்கப்படுகிறது.
ஒன்று விஞ்ஞானம் மற்றது மெய்ஞானம்.
விஞ்ஞானம் = விக்ன+ஞானம் என பிரிக்கலாம்.
’விக்ன’ என்றால் “உடைந்த”, “சிதைந்த” என்று பொருள். விஞ்ஞானம் என்றால் உடைத்து பார்க்கின்ற அறிவு, சிதைத்து பார்க்கின்ற அறிவு என பொருள். இந்த விஞ்ஞானம் விஞ்ஞானிகளால் மூன்று வகையாக் பகுக்கப்படுகிறது. அவை பௌதீகம், ரசாயனம், உயிரியல் என்பனவாகும்.
பொருட்களை உடைத்தும், பகுத்தும்,
சிதைத்தும் செய்து பார்க்கின்ற அறிவு பௌதீக இயலைப்பற்றிய அறிவு.
பொருட்களை உடைத்தும், சிதைத்தும்,
எரித்தும், காய்ச்சியும், ஆவியாக்கியும்,
ஒன்றை இன்னொன்றோடு கலந்தும் ஆய்வு செய்து பார்க்கின்ற அறிவு ரசாயன இயலைப்பற்றிய அறிவு.
உயிரினங்களின் உடம்புகளின் இயக்க
நுட்பங்களைக் கூர்ந்து கவனித்தும், அறுத்து கவனித்தும் அவற்றின் இயக்க பேதங்களின்பால் இருப்பதாகிய இயற்கை நுட்பங்களை அறிந்து
தெளிதல் உயிரியல் பற்றிய அறிவாகும்.
“மெய்” என்றால் உடம்பு, உண்மை என்று
பொருள். மெய்ஞானம் என்றால்
உடம்பைப்பற்றிய அறிவு என்பது நேர்பொருள்.
இதுவல்லாது மெய் என்ற சொல்லுக்கு
“உண்மை” என்று பொருள் கொண்டு,
உண்மையான் அறிவு என்று பொருள்
கொள்ளலாம்.
விஞ்ஞானம் எவ்வாறு மூன்று வகையாகப் பகுத்து பார்க்கப்பட்டதோ அவ்வாறே மெய்ஞ்ஞானமும் மூன்று வகையாக்ப் பகுத்துப் பார்க்கபடுகிறது. அவை உடம்பு, உயிர், மனம் என்பனவாகும்.
உடம்பு எதனால் இயங்குகிறது? இந்த
உடம்புக்கு நோய், நொடிகள் எவ்வாறு
வருகின்றன? வந்தபின் மருந்து என்ற ஒன்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, நோய் நொடிகளே வாராமல் தடுத்துக் கொள்ள என்ன வழி? இந்த உடம்புக்கு இளமையும் முதுமையும் எதனால் வருகின்றன?
இவற்றையெல்லாம் ஆய்ந்து அறிவது
உடம்பைப் பற்றிய அறிவு.
உயிர் என்பது என்ன? இது மனித உடம்பில் எங்கே இருக்கிறது? மனிதனின் சகலமானஇயக்கங்களுக்கும் இதுதான் ஜீவன் என்ற ஆதாரமா? உயிர் போனபின் உடல் அழிந்து போகிறது. உயிர் என்ன ஆகிறது? உயிரின் நிலை மரணத்திற்குப் பின்னால் என்ன? மரணம்
என்பது மானுடனின் சகலமான
இயக்கங்களுக்கும் ஒரு இறுதி முடிவா? இந்த மரணத்தை மனிதன் வென்று விட முடியாதா? முடியுமானால் அதற்கு என்ன வழி? முடியாது என்றால் மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்வு
இருக்கிறதா? இவைகளைப் பற்றி ஆய்ந்த அறிவு உயிரைப்
பற்றிய அறிவாக ஆயிற்று. இந்த அறிவே
ஆன்மாவின் துலக்கமாயிற்று.
மனம் என்பது என்ன? இது எங்கே இருக்கிறது? இது ஏன் ஒரு நொடி கூட சும்மா இராமல் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது? இப்படி அலைகின்ற மனதைக் கொஞ்ச நேரமாவது
சிந்தனைகளே இல்லாதபடி சும்மா
வைத்திருக்க முடியாதா? அப்படிச்
சிந்தனைகளே இல்லாதபடி மனதை அசைவற்ற நிலைக்கு கொண்டு செல்வதால் மனிதன்
பெறுகின்ற பயன் என்ன? இப்படி மனதை
ஆய்ந்து அறிகின்ற அறிவே மனதைப் பற்றிய அறிவு.
இப்படி மூவகைப் பகுப்புகளின் கீழே
விவரிக்கப்படும் விஞ்ஞானத்திற்கும்,
மெய்ஞ்ஞானத்திற்கும் குறிப்பிடும்படியான
ஒற்றுமைகள் ஏதும் இல்லை. ஆனால்
விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரம்ப
வேறுபாடுகள் கொண்டது.
விஞ்ஞானம் தனது சோதனைக் கூடத்துக்குள் சிக்குகின்ற பொருட்களை மட்டும் ஆய்வு செய்ய முடியும்.
மெய்ஞ்ஞானம்; கண்ணால் பார்க்கமுடியாத, கைகளால் தீண்டமுடியாத எந்த சூட்சமத்தையும் ஆய்வு செய்ய வல்லது.
விஞ்ஞானதிற்கு சோதனைகான புறக்கருவிகள் தேவை. மெய்ஞானத்திற்கு கருவிகள் ஏதும்
வேண்டாம். அக கருவியான மனமே அதன் கருவி. விஞ்ஞானத்தின் கோட்பாடுகள், முடிவுகள், விஞ்ஞானிக்கு விஞ்ஞானி, நாட்டுக்கு நாடு, காலத்திற்கு காலம் மாறகூடியவை.
மெய்ஞ்ஞானத்தின் கோட்பாடுகளும்,
முடிவுகளும் அன்றும், இன்றும் இனி என்றும் நிலையானவை. மாற்ற முடியாதவை.
வேதம் கூறும் பிரபஞ்ச அறிவியல்
இன்றைய அறிவியலார் Big Bang என்னும் வெடிச் சிதறலில் இருந்து நாம் இருக்கும் உலகங்கள் உண்டாயின என்கின்றனர். சமீபத்திய
ஆராய்ச்சிகள் இந்த ஊகம் தவறென்றும், மாறாக, படைப்பு என்பது நுண்ணிய அணுக்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் String theory -ஆக இருக்கலாம் என்றும்
காட்டுகின்றன.
வேதம் காட்டும் அண்ட சராசரங்களின் படைப்பை நோக்கினால் இந்நாள்
அறிவியலார் இன்னும் விரிந்த சிந்தையை அடையவில்லை என்று தெரிகிறது. அப்படி என்ன விரிந்த சிந்தனையை வேதம்
காட்டுகிறது என்றால், இதோ சில முக்கியக் கருத்துக்கள்.
1) நாம் இருக்கும் இந்த அண்டவெளி
மட்டுமல்ல, கோடானு கோடி அண்டவெளிகள்,
பலப் பல உலகங்களைத் தாங்கிக் கொண்டு
இருக்கின்றன.
2) நமக்கு மேலும் கீழும் நமக்கு அப்பாலும்
நம்மை அப்பால் கொண்டும் பிரபஞ்சங்கள்
இருக்கின்றன.
3) அவை எல்லாம் பிரம்மன் என்றும்
ஹிரண்யகர்பன் என்றும் சொல்லபடும் அந்த
முழுமுதல் இறைவனின் கர்ப்பத்தில் உள்ளன.
4) கணக்கிட இயலாதவையாக அவை உள்ளன.
5) இந்த உலகங்கள் என்று ஆரம்பித்தன என்றும்
தெரியாத, சொல்ல முடியாத ஆதியும்
இல்லாமல், அந்தமும் இல்லாமல் இருக்கின்றன.
இவை எல்லாவற்றிலும் படைத்தல், காத்தல்,
அழித்தல் என்னும் மூன்று தொழில்களும்
இடைவிடாது நடந்து கொண்டிருக்கின்றன.
6) புருஷ சூக்தம் கூறும் குறிப்பிடத்தக்க
அமைப்பு, கவனிக்கத் தக்கது. இறைவனே
படைத்து, எல்லாவற்றிலும் வியாபித்து
இருந்தாலும், தோன்றியவை எல்லாம்
அவருடைய கால் பங்கு மட்டுமே. அவரது
முக்கால் பங்கு அழிவற்றதான விண்ணில்
இருக்கிறது. பரம்பொருளின் முக்கால் பங்கு
மேலே விளங்குகிறது. எஞ்சிய கால் பங்கு
மீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது
என்று 3, 4 -ஆம் ஸ்லோகங்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட அமைப்பு எவ்வாறு இருக்கும்
என்று சிந்தித்தால், அது சக்கர
வடிவுடையதாக இருக்க வேண்டும். இதற்கும்
பிரமாணம் உள்ளது. ச்வேதாஸ்வதர
உபநிஷதத்தில், இந்தப் பிரபஞ்சம் பிரம்மச்
சக்கரமாக உள்ளது என்று விவரிக்கப்படுகின்றது. இதன் பலவித பாகங்களும்
விவரிக்கப்பட்டு, இதில், கர்மம் என்னும் பாசக்
கயிற்றில் கட்டப்பட்டு ஜீவன் சுழன்று
வருகிறான். மீண்டும் மீண்டும் சுழலுகையில்,
பிரம்ம ஸ்வரூபத்தைப் புரிந்துகொண்டு,
இந்தச் சக்கரத்தில் சுழலச் செய்யும் பிறவிப்
பிணியிலிருந்து முடிவில் விடுபடுகிறான்.
ஆக, உலகங்களையும், பால்வெளி போன்ற
கலாக்சிகளையும் தன்னகத்தே கொண்ட
பிரபஞ்சம் சுழலும் சக்கர வடிவினதாக இருக்க
வேண்டும். அப்படிப்பட்ட அமைப்பில்தான்,
ஆதியும் இருக்காது, அந்தமும் இருக்காது.
சக்கர அமைப்பில்தான் எங்கே தோன்றியது,
எங்கே முடிந்தது என்று சொல்ல முடியாமல்
இருக்கும். கணக்கிலடங்காத பல சக்கரங்கள்
ஒன்றுக்கு அப்பால் ஒன்றென infinity அளவில்
இருக்க முடியும். ஒன்றுக்கு மேலும், அல்லது
கீழும் என்றும், Concurrent circles- ஆக
முடிவில்லாமல், கணக்கில்லாமல் ஒன்றை
அடுத்து ஒன்றாகவும் இருக்க முடியும்.
*இன்றைய அறிவியல் ஆய்வில் தியானம்*
************************************************
10 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை
தியானம் செய்து ,தியானத்தில்
முதிர்ந்தவர்களையும் ஆரம்ப நிலையில்
தியானம் செய்பவர்களையும் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ..
தியானத்தின் போது
மூளையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி Electro
Encephala Gram கருவியால் ஆய்வு
செய்யப்பட்டது .இந்த ஆய்வு தியானத்தின்
போது மூளையில் ஐந்துவகை அலை
வரிசைகள் உருவாவதாக சொல்கிறது ..
அவைகள் உருவாககும் உணர்வு நிலைகளை
சொல்கிறது .
அவைகள்
b Deltawave :upto 3 Herdz….. Deep sleep state
Thetawave :4 to to 7HZ Transition between
deep sleep and dream state
Alpha wave:, 8 to 15 Dream state when the
eye is closed and not in deep sleep
Beta wave: 16 to 31 consciousness state
Gamma wav 32 to 100 HZ at the higher stage
of meditation . , Stochastic resonance .
டெல்டா அலைவரிசை :
************************
ஆழ்ந்த தூக்கத்தில்
உணர்வு அற்ற நிலையில் உருவாகிறது .
இந்தஅலைவரிசை 3 ஹெர்ட்ஸ் வரை
இருக்கும் இதை சித்தர்கள் சுழுத்தி. என்றனர்.
Delta wave upto 3 Herdz….. Deep sleep state
தீடா அலைவரிசை .
**********************
இது 4 முதல் 7ஹெர்ட்ஸ்
வரை இருக்கும் இது கனவு நிலையில்
இருந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு
செல்லும் . Thetawave 4 to to 7HZ Transition
between deep sleep and dream state .
ஆல்பா அலை வரிசை :
*************************
கண்களை
மூடியநிலையில் உருவாவது . இந்த
நிலையில் 8 முதல் 15 ஹெர்ட்ஸ் உருவாகும் .
15 ஹெர்ட்ஸ் உயர் அலைவரிசையில் கனவு
தோன்றும் Alpha wave, 8 to 15 Dream state
when the eye is closed and not in deep sleep.
இதை சொப்பனா அவஸ்தை என்றாற்கள்
சித்தர்கள் .
பீட்டர் அலை வரிசை :
***********************
இந்த அலைவரிசை 16
முதல் 32 ஹெர்ட்ஸ் அதிர்வில் உருவாகும்.
இது, கண் திறந்த நிலையில் சுய உணர்வு
நிலையில் உருவாகும் . இதை விழிப்பு
அல்லாது ஜாக்கிரதா அவஸ்தா என்றார்கள்
சித்தர்கள் .
சாதாரண மனிதர்கள் பீட்டா அலை வரிசை என்ற
சுய உணர்வு நிலையில் இருந்து ஆல்பா
அலைவரிசையில் கனவுநிலைக்கு சென்று தீட்டா அலைவரிசையில் தூக்கநிலை அடைகின்றனர் பின்பு டெல்டா அலைக்கு
சென்று ஆழ்ந்த தூக்கம் அடைந்து சக்தி
பெறுகின்றனர் . சக்திபெற்றபின் விழிப்பு
அடைகிறார்கள் . இது மரணிக்கும் பாதை. .
ஆனால் விழிப்பு நிலையில் இருந்து அதாவது
பீட்டா நிலை யில் இருந்து காமாநிலைஎன்ற்
துரிய நிலை சென்று அளப்பரிய சக்தியும்,
சித்தியும் பெறுவது மரணமில்லா பாதை .
அப்பொழுது பிரத்தியாகாரம தாரணை தியானம்
ஆகிய படித்தரநிலைகளை கடக்கவேண்டும்
என்று சித்தர்களின் வாசி யோகம் சொல்கிறது
இது ராஜ பாட்டை என்ற ராஜ யோகம் .என்ற அஷ்டாங்க யோகம் .எளிதாக , மனம் குழப்பம்
அடையாமல் துரியம் என்ற காமா நிலை
அடையமுடியும் மேலும் பாதுகாப்பானது.
- *சித்தர்களின் குரல் shiva shangar*
Comments
Post a Comment