தேவை Vs விருப்பம் - பணக்காரர் ஆக்கும் சூட்சுமம்!
- Get link
- X
- Other Apps
தேவை Vs விருப்பம் - பணக்காரர் ஆக்கும் சூட்சுமம்!
நம்மில் பலருக்கு தேவைக்கும், விருப்பத்துக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. அதனால்தான் பணத்தைக் கண்டபடி செலவு செய்து நிரந்தர ஏழைகளாக இருந்து வருகிறோம். தேவை என்பது வாழ்வதற்கு அவசியம். விருப்பம் என்பது தேவையைத் தாண்டிய ஒரு விஷயம்.
ஓர் உதாரணம்... மதியம் சாப்பிடச் செல்கிறோம். சாப்பாடு ரூ.60. அதுவே சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரூ.120. பசிக்கு உணவு வேண்டும் என்றால், ரூ.60-ல் மதியச் சாப்பாட்டை முடித்துவிடலாம். அதுவே வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்தால், அது விருப்பம். அதற்கு நாம் தரும் விலை, சாப்பாட்டைவிட இரு மடங்கு அதிகமான விலை.
வாழ்க்கையில் அதிக வாய்ப்பு வசதி வரும் வரைக்கும் ஒருவர் தேவைக்கு வாழ்பவராக இருப்பதே நல்லது. மாதத்தில் சில தினங்கள் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படலாம். எப்போதும் விருப்பத்தின் அடிப்படையில் செயல்பட்டால், பணம் அவ்வளவு எளிதில் சேராது.
இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒருவர் சொந்த ஊருக்குப் போகிறார். ஊருக்கு செல்ல பஸ், ரயில் வசதி இருந்தால், அதனைப் பயன்படுத்திக் கொள்வது லாபம். இது நம் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் வழி. இதுவே காரில் ஊருக்குச் செல்வது நம் விருப்பமாக இருக்கும். தேவையா, விருப்பமா என்பதை அறிந்து செயல்படுவது புத்திசாலித்தனம்.
தேவையை அதிகமாகவும், விருப்பத்தைக் குறை வாகவும் வைத்துக்கொண்டால், அதிக பணம் மிச்சமாகும். அதனை முதலீடு செய்தால் நிச்சயம் பணக்காரர் ஆக முடியும். தேவை மற்றும் விருப்பத்தை எடை போட்டு செலவு செய்தால், குறைந்தபட்சம் மாதம் 1,000 ரூபாயாவது மிச்சமாகும். இந்தப் பணத்தை முதலீடு செய்து பலன் பெறலாமே!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment