இளைஞர்களுக்கு தியாக உணர்வு தேவை
- Get link
- X
- Other Apps
இளைஞர்களுக்கு தியாக உணர்வு தேவை
Published on : 20th September 2012 02:04 PM |
புதுச்சேரி, மே 8: இளைஞர்களுக்கு தியாக உணர்வு தேவை என்று பட்டிமன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்த சோ.சத்தியசீலன் கூறினார்.
÷புதுச்சேரி கம்பன் விழாவில் "மதிதரும் குமரருள் வலியவர் யார்' என்னும் தலைப்பில் லட்சுமணனே, அங்கதனே, இந்திரசித்தனே என்று 3 அணியினர் வாதிட்டனர். நடுவர் சோ.சத்தியசீலன் 3 பேரின் வாதங்களையும் கேட்டறிந்தார்.
அதன் பின்னர் அவர் அளித்த தீர்ப்பு: இளைஞர்களுக்கு தெளிவான அறிவு இருக்க வேண்டும். நெஞ்சில் துணிவு இருக்க வேண்டும். செயலில் கனிவு இருக்க வேண்டும். இளைஞர்களுக்குத் தியாக உணர்வும் அவசிய தேவையாகும்.
÷லட்சுமணன், அங்கதன், இந்திரஜித் ஆகிய 3 பேரிடமும் அறிவு, துணிவு, கனிவு ஆகிய பண்புகள் இருந்துள்ளன. ஆனால், லட்சுமணனிடம் மட்டும்தான் தியாகம் என்ற பண்பு உயர்ந்து இருக்கிறது.
÷இந்திரஜித் தன்னுடைய தந்தைக்காகப் போரிட்டு உயிர்த் துறந்தான் என்றாலும் லட்சுமணன் செய்ததுதான் தியாகம். தன்னுடைய அண்ணன் ராமனிடம் அடைக்கலமாக வந்த விபீஷணுக்குப் பாதிப்பு வந்தபோது அவனைக் காத்தவன் லட்சுமணன்.
÷தன்னுடைய அண்ணனுக்குப் பழி வரக்கூடாது என்பதற்காக இப்படி செய்தான். கம்பராமாயணத்துக்கு சரணாகதி காப்பியம் என்றும் பெயர் உண்டு. சரணாகதி அடைந்தவர்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் லட்சுமணன் கதை பாத்திரம் இப்படி தியாக உணர்வை வெளிப்படுத்துகிறது.
÷தியாக உள்ளம் கொண்ட இளைஞர்கள் இருக்கும் நாடுதான் உயர்ந்து நிற்கும். அதனால் மற்ற எல்லா குணங்களைக் காட்டிலும் தியாகக் குணம் உடையவர்களாக இருப்பதுதான் சிறப்பு. அதனால் மதி தரும் குமரருள் வலியவர் லட்சுமணன் என்று தீர்ப்பு அளித்தார் நடுவர் சத்தியசீலன்.
முன்னதாக இந்த 3 கதை பாத்திரங்களில் யாரை விலக்குவது என்று நோக்கர்கள் சார்பில் வாக்குச் சேகரிப்பு நடந்தது. இதில் மொத்தம் 49 வாக்குகளில், பதிவானது 44 வாக்குகள். அதில் ஒன்று செல்லாத வாக்கு. மீதி வாக்குகளில் இந்தப் போட்டியிலிருந்து நீக்க வேண்டும் என்று இந்திரஜித்துக்கு 20 வாக்குகளும்,அங்கதனுக்கு 17 வாக்குகளும், லட்சுமணனுக்கு 6 வாக்குகளும் விழுந்தன.
÷நடுவர் தீர்ப்பும், வாக்காளர்களின் தீர்ப்பும் கம்பன் விழா பட்டிமன்றத்தில் ஓன்றாயிருந்தது. இந்தப் பட்டிமன்ற தீர்ப்பு ஞாயிற்றுக்கிழமை மேல்முறையீட்டுக்கு கம்பன் விழாவில் வருகிறது.
÷பட்டிமன்றத்தில் லட்சுமணன் அணியில் கே.சுமதி, கவிதா ஜவஹர், இரா. ராமசாமி பேசினர். அங்கதன் அணியில் த. ராமலிங்கம், எஸ். விஜயகிருஷ்ணன், நா. இளங்கோவும்,இந்திரஜித் அணியில் அ. அறிவொளி, இரா. ராமமூர்த்தி, தி. கோவிந்தராசு ஆகியோரும் பேசினர்.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment