மனைவியின் மாண்பு

"மனைவியின் மாண்பு' என்ற தலைப்பில் புலவர் புலமைபித்தன் பேசுகையில், "உலகம் அன்பினால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. கணவன் - மனைவி என்ற இல்லறத்தை பொறுத்தவரை அன்பு என்பது மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது. மனைவிதான், குடும்ப தலைவனை சிறந்த குடிமகனாக மாற்றுகிறவள். மனைவியை மதிக்க தெரிந்தவன், சமூகத்தை மதிக்க தெரிந்தவன்' என்றார்.
பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதாவது: வாழ்க்கையில் நமக்கும் கிடைக்கும் வாய்ப்புகளை கொண்டு முன்னேற கற்றுக் கொள்ள வேண்டும். பெண் என்பவள் வாழ்க்கையின் முக்கியமான அங்கம். எனவே, பெண்ணின் பெருமையை உணர்ந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். மனைவியின் முக்கியத்துவம் உணர்ந்து, அவளை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். தலைவனை, தலைமை பண்பிற்கேற்ப மாற்றுவது பெண் என்பதை உணர வேண்டும்.
மனைவி சிறந்த காரியங்கள் செய்யும் போது பாராட்ட வேண்டும். அதுதான், குடும்பத்திற்கு ஏற்றது. பெண்களுக்கு சுயமரியாதை பறிபோகும் போது, அதை கண்டு பொங்கி எழுகிறவன்தான் உண்மையான மகான். வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டுமானால், பெண்ணை இழிவுபடுத்தி பேசுவதை தவிர்க்க வேண்டும். இருவரும் பரஸ்பர அன்புடன் பழக வேண்டும். இவ்வறு, பர்வீன் சுல்தானா பேசினார்.
விழாவில் பங்கேற்ற தம்பதிகள், தங்களுக்குள் கனி மற்றும் மலர்களை பரிமாறி கொண்டனர். அறிவு திருக்கோவில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னசாமி நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்