பிட் காயின் என்றால் என்ன?

Bitcoin என்றால் என்ன? இந்தியாவில் எப்படி வாங்குவது? ஆர்பிஐ ஏன் இதை எதிர்க்கின்றது..?

இந்த எண்ணம் அதிக அளவில் ஊழல் செய்து கணக்கில் வராமல் பணம் சேர்த்து வைத்திருக்கும் பெரும் வணிகர்கள், கொழுத்த அரசியல்வாதிகள் ஆகியோரிடமும் உள்ளது.

அரசாங்கத்தின் கோஷத்திற்கும், மக்களின் எண்ணத்திற்கும் இடையில் புகுந்து தந்திரமாக விளையாடி பணத்தை அபகரிக்கும் மோசடி பேர்வழிகளின் இன்னொரு விளையாட்டுதானோ என்று நினைக்க வைக்கும் இந்தப் பிட் காயின் வர்த்தகம் மெல்லத் தடம் பதித்து வருகிற இந்தச் சூழ்நிலையில் இது குறித்து ஓரளவு நமக்குத் தெரிந்த தகவல்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதில் தவறில்லை.

பிட் காயின் என்றால் என்ன?

பிட் காயின் ஒரு கரன்சிதான். ஆனால் இது ஒரு மெய் நிகர் கரன்சி. இதன் வடிவத்தை நன்கு அலசி ஆராய்ந்து புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. இந்தக் காயினை நாம் நம் கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு பரிமாற்றங்கள் செய்ய முடியாதது. இது காற்றில், கணினியில் கண்களால் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு வகைப் பணப் பரிமாற்றம்.

இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிவர்த்தனைக்கானது. ஜப்பானியர் ஒருவரால் உருவாக்கப்பட்ட இந்தக் கொள்கை மெல்ல மெல்லக் காலூன்றி வருகிறது. நம்மிடையே உள்ள பணப்புழக்கத்திற்கும், பிட்காயின் புழக்கத்திற்கும் இடையே உள்ள சில வித்தியாசங்களை இங்கே காண்போம்.

பிட்காயின் மதிப்பு என்ன?

ஒரு பிட்காயின் = ரூ.18,050/= மட்டுமே.

ஒரு பிட்காயின் = 350 அமெரிக்க டாலர் .


இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி?

பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பிட்காயின்களை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. "ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்தவொரு நிறுவனத்திற்கோ, நிதிக் கழகத்திற்கோ எந்தவொரு அனுமதியோ, அதிகாரமோ இத்தகைய திட்டங்களை நடத்துவதற்கோ அல்லது பிட்காயின் அல்லது வேறு எந்தவொரு மெய் நிகர் செலாவணிக்கோ கொடுக்கப்படவில்லை.

எனவே, ஒரு பயனாளர், பற்றாளர், முதலீட்டாளர், வர்த்தகர் முதலியோர் இத்தகைய மெய் நிகர் செலாவணியில் அவரவரின் சொந்த பொறுப்பிலேயே செயல்பட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது."

உச்ச நிலை நிதி அமைப்பு முதலீட்டாளர்களை, நிதி, சட்டம், பயன்பாடு தொடர்பிலான பாதுகாப்பின்மை என்று எச்சரிக்கிறது.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய செய்தித்துறை இணை அமைச்சர் கூறுகையில், " எந்த ஒழுங்குமுறை ஒப்புதலோ, பதிவோ, அதிகார அளிப்போ, இத்தகைய நிறுவனங்களின் இதுபோன்ற செயல்களுக்கு வழங்கப்படவில்லை, எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் பிட்காயின் வாங்குவது எப்படி?

இதற்காக இணையத்தில் இயங்கும் பல்வேறு நிதிமாற்று முனையங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து இத்தகைய சுலப வர்த்தகச் செலாவணியை நாம் வாங்கிக் கொள்ள இயலும். இந்தியாவின் சில புகழ்பெற்ற பிட்காயின் வேலட் நிறுவனங்கள், Zebpay, Unocoin, BTCXIndia மற்றும் Coinsecure ஆகியனவாகும்.

Zebpay தளத்தில் பிட்காயினில் முதலீடு செய்வது எப்படி?

நீங்கள் Zebpay தளத்தில் பிட்காயினில் முதலீடு செய்வதாயிருந்தால் உங்கள் வழிமுறைகள் இவ்வாறு தொடரும் :

1. அடையாள சரிபார்ப்பு ( ID Verification )

பிட்காயின் வர்த்தகத்தில் பலமாக, பாதுகாப்பாக இயங்கிட சரிபார்ப்பிற்காக உங்களின் பான்கார்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. Zebpay வங்கிக் கணக்கிற்குப் பிட்காயின் வர்த்தகத்திற்காகப் பணப் பரிமாற்றம் செய்யவேண்டும்:

ஒவ்வொரு Zebpay கணக்கிற்கும், ஒரு வங்கிக்கணக்கை பதிவு செய்ய வேண்டும். வங்கிகளுக்கிடையிலான பணப் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும். பரிமாற்றம், NEFT, RTGS மற்றும் IMPS போன்ற ஏதாவதொரு முறையில் செய்யப்படலாம்.

3. பிட்காயின் வாங்குதல் அல்லது விற்றலை முடித்தல் :

Zebpay செயலி மூலமாகப் பிட்காயின் வாங்கும்போதும், விற்கும்போதும் செயலியில் கேட்கும் கேள்விகளின் பதிலடிப்படையில், தொகையினை உள்ளீடு செய்ய வேண்டும். அதன் மதிப்பு உருவாக்கம் வழிமுறைகள் ஏதுமின்றிப் பயனாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோரின் கடும் உழைப்பின் மூலமே இதனைச் செய்யமுடியும்.

ஆர்பிஐ எச்சரிக்கை

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்தப் பிட்காயின் மதிப்பு உருவாக்கம், சொத்துப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை படுத்த படாத பரிமாற்றங்களின் போது ஏற்படும் விளைவுகள் நிதி மற்றும் சட்டம் சம்பந்தப்பட்ட ஆபத்துக்களுக்கு இவற்றில் ஈடுபடுபவரின் சொந்தப் பொறுப்புகளின் அடிப்படையிலேயே செயல்பட்டுக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

இந்தியர்கள் பிட்காயினை ஏற்பார்களா?

உண்டியல் மூலம் நாணயங்களைச் சேமித்து வந்த நம்மூர் மக்கள் கண்ணால் பார்க்கமுடியாத கையில் வைத்துச் செலவிடமுடியாத இந்தப் பிட்காயின் இந்திய பெரும்பான்மை அடித்தட்டு மக்களால் எந்த அளவுக்கு ஏற்கப்படும் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால் வருங்காலத்தில் இந்தப் பிட்காயின் புழக்கம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒரு சக்தியாக வளர்ந்து வருகிறது.

பிட்காயினில் பரிவர்தனை கட்டணம் இல்லை

கிரெடிட் கார்டு மூலம் நாம் பொருள்கள் வாங்கும்போது நமக்குப் பொருள்கள் விற்கும் நிறுவனம் கிரெடிட் கார்டு நிறுவனத்திற்கு ஒரு தொகை தரகு பணமாகக் கொடுக்கிறது. ஆனால் இந்தப் பிட்காயின் முறையில் இந்தத் தரகு முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுப் பொருளுக்கு உரிய விலை மட்டுமே கொடுக்கப்படும் என்ற ஒரு விஷயம் நம்மைச் சற்று யோசிக்கவும் வைக்கிறது.

இந்தியாவில் பிட்காயினின் வளர்ச்சி

இந்தியாவில் தினமும் 2,500 பயனர்கள் பிட்காயின் கணக்கை துவங்குவதாகவும் இன்று வரை 5 லட்சம் நபர்கள் பிட்காயின் செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாகவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.

தமிழர்களுக்குப் பிட் காயின்

TAMIL BIT COIN என்ற முகநூல் தளமும் தமிழர்களுக்கு இந்த முறையினை நமக்குப் பரிச்சயபடுத்துவதுடன் சாதகப் பாதகங்களைப் பற்றியும் ஆரோக்கிய விவாதத்திற்கும் வழி வகுத்திருக்கிறது. வருங்காலம் கண்டிப்பாக ஒருநாள் இந்தப் பிட்காயின் பக்கமே இருக்கக்கூடும். கையில் இல்லா காசை வைத்து கண்ணால் பார்க்க முடியா காசை வைத்திருப்பவன் பணக்காரன் என்ற புதிய தோற்றங்கள் உருவாகும். பார்ப்போம்...

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்