ஈர்ப்பு விதி
ஈர்ப்பு விதி என்பது உளவியலில்(psychology) பெரும் பங்கு வகிக்கிறது.
இது ஒரு காந்தசக்தியாக (magnetic energy)கருதப்படுகிறது.
சுய பிரகடனம் (auto suggestions), அதாவது எதை அடைய நினைத்தாலும் , அதன் நேர் மறை எண்ணங்களை மனதில் பதிய வைத்து அதை நினைத்து மனக் காட்சி (visualisation)மூலம்,செயலில் இறங்கி நினைத்ததை அடைவது. இதுவே ஈர்ப்பு விதியாக கூறப்படுகிறது.
மிகவும் எளிதாக நினைக்கும் முறையாக தோன்றினாலும், ஆழ்மனதை வைத்து முயற்சி பண்ணினால், நாம் விரும்பியதை அடைய முடியும் என்பதே ஈர்ப்பு விதி.
(When you become an magnet of something, you can attract anything you want. This is Law of attraction)
சுய எண்ணங்கள் தான் காந்தசக்தி.
நீங்கள் என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவே ஆகிவிடுவீர்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது புத்தர் கூறியது.
இதையே தான் அப்துல் கலாம் கூறினார்."கனவு காணுங்கள், நீங்கள் என்ன கனவு காணுகிறீர்களோ அதுவாக ஆகுவீர்கள்" என்றார்.
ஈர்ப்பு விதி 3 பகுதிகளில் அடங்கும்.
கேட்பது (ask)
நம்புவது (believe)
அடைவது (receive)
நாம் முதலில் நமக்கு என்ன வேண்டும், என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது நம்ப வேண்டும்.நாம்இதை அடைய போகிறோம் என்று.
மூன்றாவதாக நினைத்ததை கவர்வது அல்லது அடைவது.
இந்த ஈர்ப்பு விதியில்,நீங்கள் தன்னை ஒரு காந்தமாக எண்ண வேண்டும்,
எதை அடைய நினைக்கிறீர்களோ, அந்த காந்தமாக மாற வேண்டும்.
வெற்றி, காதல், சந்தோஷம், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, அதிர்ஷ்டம், முதலிடம், இவ்வாறு எதை அடைய நினைத்தாலும் அந்த காந்தமாக நாம் மாறி அதை ஈர்த்து எதையும் அடைய நினைத்தாலும் அடையலாம்.
கார் காந்தம்(magnet)
காதல் காந்தம்(magnet)
வெற்றி காந்தம்(magnet)…. இது போல், நினைத்து, உருவாக்கி,அதை நம்பி அடைய வேண்டும்.
ஒன்றை அடைய நமக்கு அந்த தகுதி இருப்பதாக நம்பி, நினைத்ததை காந்தம் போல் ஈர்த்து அடைய முடியும்.
தாழ்வு மனப்பான்மை , தகுதி இல்லை, அல்லது முட்டாள், எனக்கு ஒன்றும் தெரியாது, என்று நினைத்து ஒன்றை அடைய நினைத்தாலும், அது நடக்காது.என்னால் என்ன முடியும் என்று நினைத்து எதை செய்தாலும் , எதையும் செய்யமுடியாத காந்தமாக மாறுவீர்கள்.
இதுவே ஈர்ப்பு விதியின் முக்கிய சாராம்சம்.
தோல்வியை நினைத்தே வாழ்ந்தால், வாழ்க்கை அவ்வாறே அமையும்.
ஈர்ப்பு விதி (Law of attraction), பற்றிய உளவியல் உண்மைகளை நன்கு அறிந்து பயன்பெற, (Secret, book by Rhonda Byrne ) இந்த புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும்.
ஈர்ப்பு விதி, எதை ஈர்க்க வேண்டுமோ, அதை ஆழ் மனதில் பதிய வைக்க வேண்டும். நாம் அடைய நினைத்ததை நம்பி, அதை ஆழ் மனதில் பதிய வைத்து ,அதன்மூலம் எழும் காந்த அலைகள் நமக்கு ஒரு உந்துதல் தந்து, நாம் எதையும் அடைய முடியும் என்று நம்மை நம்ப வைக்கும் ஆழ்மனது.
இவ்வாறு ஈர்ப்பு விதி உளவியல் ரீதியாக நம்பப்படுகின்றது.
Comments
Post a Comment