பெரியார் சொத்துகளை அரசுடைமையாக்க பெரியார் தி.க. கோரிக்கை
- Get link
- X
- Other Apps
பெரியார் சொத்துகளை அரசுடைமையாக்க பெரியார் தி.க. கோரிக்கை
- By Sutha
இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் குடியரசு இதழ் கட்டுரை தொகுப்பு வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி பேசுகையில்,
1978 ல் திருவாரூர் தங்கராசு பெரியாரின் சொத்துகள் அனைத்து திராவிடர்களுக்கும் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். அப்போது சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தியதால் அந்த வழக்கு தள்ளுபடியானது.
பெரியார் தான் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தை சங்கங்களின் சட்டத்தின் கீழ்தான் பதிவு செய்தார். அறக்கட்டளையாக அதை பதிவு செய்யவில்லை. பெரியார் தனது பெயரில் உள்ள சொத்துகளை பத்திரம் மூலம் அந்த அமைப்புக்கு மாற்றவில்லை.
அவரது பெயரில் சென்னை பெரியார் திடல், ஈரோடு பெரியார் மன்றம், திருச்சி பெரியார் மாளிகை உள்ளிட்ட சொத்துகள் உள்ளன. அவருக்கு சட்ட வாரிசுகள் இல்லாததால் இந்து வாரிசுரிமைச் சட்டப்படி, அவை தமிழக அரசுக்கு போய்ச் சேர வேண்டும். எனவே, அரசு அவரது பெயரில் உள்ள சொத்துகளை அரசுடைமையாக்கப்பட வேண்டும்.
ஜூன் 30 ம் தேதிக்குள் அதைச் செயல்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார் துரைசாமி.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment