Goosebumps and Gooseberry
(Goosebumps)புல்லரித்தல்:
மயிர் கூச்செறிவது அல்லது புல்லரிப்பது என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு அன்றாட நிகழ்வாகும். அதிகமான குளிர், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் போன்ற தருணங்களில் கை, கால்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் திடீரென எழுந்து நிற்கும். சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் இது அனைவருக்கும் பிடித்த ஒரு உணர்வாகும்.
இது எந்தெந்த நேரங்களிலெல்லாம் ஏற்படும் என்பதைப் பார்ப்போம். கேள்வியை கேட்டமைக்கு நன்றிகள். இந்த பதில் தங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நினைக்கிறேன்.
பாடல்களை பாடும்போது:
என்னடா இது புதுசா இருக்கேன்னு நினைக்க வேண்டாம் இந்த அனுபவம் எனக்கும் உண்டு.
குளிராக இருக்கும் நேரம் தவிர்த்து பிடித்த பாடலை பாடும்போதும், கேட்கும்போதும் புல்லரிப்பு ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். புல்லரிப்பு ஏற்படுவது நமக்கு அந்த பாடலை எவ்வளவு பிடித்திருக்கிறது என்பதின் அடையாளமாகும்.
பொதுவாக பலருக்கும் தேசிய கீதத்தை கேட்கும்போது புல்லரிப்பதாக ஆய்வில் கூறுகிறார்கள்.
இதற்கான அறிவியல் காரணம் என்னவாக இருக்கும்?
இதோ உங்களுக்காக,
நாம் மகிழ்ச்சியாக, துன்பமாக, குளிராக உணரும்போது நமது மூளை உற்பத்தி செய்யும் ஹார்மோன் நமது முடியின் துளைகளை எழச் செய்கிறது. இது உணர்ச்சிகளுடன் தொடர்புடையதாகும்.
விஞ்ஞானத்தின் படி புல்லரிப்பு ஏற்பட உணர்ச்சிகள்தான் முக்கியமான காரணமாக உள்ளது. பல உணர்ச்சிகள் இதனுடன் தொடர்புடையதாகும்.
குறிப்பாக பயம் ஏற்படும்போது மயிர் கூச்செரிப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி ஏக்கம், மகிழ்ச்சி, பிரமிப்பு, ஆச்சரியம், பாலியல் உணர்ச்சி என இதற்கு பல உணர்ச்சிகள் காரணமாக இருக்கிறது.
மனிதர்களுக்கு மட்டும்தான் இவ்வாறு நடக்குமா?
மனிதர்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களுக்கும் இந்த உணர்வு ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக முள்ளம்பன்றி, கடல்வாழ் பாலூட்டிகள் போன்றவை அதற்கான சிறந்த உதாரணங்களாகும்.
பூனைகள்:
எனது செல்லக்குட்டிகளான பூனைகளிலும் இவ்வாறு நடப்பதுண்டு. நன்கு கவனித்து பார்த்தால் பூனைகள் சண்டையிடும் போதும், பயத்தில் இருக்கும் போதும் அவற்றின் முடி அனைத்தும் நமக்கு இருப்பது போல தூக்கி கொண்டு நிற்கும். இதுவும் புல்லரிப்பதை போன்ற உணர்வுதான்.
முடி அதிகமாக இருக்கும் மிருகங்கள் அனைத்துமே குளிர் அதிகமாக இருக்கும்போது இவ்வாறு தங்கள் முடியை தூக்கிக்கொள்ளும். அவை நினைத்தால் கூட இதனை தடுக்க இயலாது. இது அவற்றை கடுமையான குளிரிலிருந்து பாதுகாக்கும்.
பொதுவாக விலங்குகளுக்கு புல்லரிப்பது என்பது எதிரிகளின் வருகையை உணர்த்துவதாகவும் இருக்கிறது. இது அவர்களின் உயிரை காப்பாற்றும் ஒரு எச்சரிக்கை உணர்வாக இருக்கிறது. சிம்பான்சி, எலி மற்றும் வேறு சிலவகை குரங்குகளுக்கு எதிரிகள் வரும் முன்னரே இந்த உணர்வு வந்துவிடும்.
மற்றுமொரு தகவல், சிலந்தி மனிதனுக்கும்(spider man) ஆபத்தை உணரும் பொழுது இவ்வாறு நிகழ்கிறதாம்.
நன்றி…
அன்புடன்…
விலங்கியல் மாணவன்
Comments
Post a Comment