அன்னம்+காவடி சிவகிரி, சத்தியகிரி ஆகிய இரு மலைகளையும் அகத்திய முனிவரின் சீடனான இடும்பன் காவடியாகக் கட்டி, கயிலையில் இருந்து எடுத்து வந்ததாகப் பழநி ஸ்தல புராணம் கூறுகிறது. பழநியிலுள்ள இந்த இரு மலைகளுக்கும் காவல் தலைவன் இடும்பன்தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவுகூரும் வகையில் இந்தப் பிரார்த்தனை வழக்கம் ஏற்பட்டதாகக் கூறுவர். ‘கா’ என்றால் காப்பாற்றுதல்; ‘அடி’ என்றால் முருகப்பெருமானின் திருவடி என்று பொருள். காவடி எடுத்தலில் பால்காவடி, பன்னீர்க்காவடி, பஞ்சாமிர்தக் காவடி, சர்க்கரைக் காவடி, சந்தனக் காவடி, புஷ்பக்காவடி, சேவல் காவடி, சர்ப்பக் காவடி எனப் பல வகை உண்டு. முருகப் பெருமானுக்கு மட்டும் காவடி (திரு கோ. அண்ணாமலை, PJK, ஜெரண்டுட், பகாங், மலேசியா) இயற்கையைப் போற்றிய பழந்தமிழரிடம் இறை உணர்வு இருந்தது. இதனைத் திருமுருகாற்றுப்படை, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது. தமிழர்களிடம் முருக வழிபாடு என்பது மிகத்தொன்மையனது. எனவே, தெய்வத் திருத்தோற்றங்களிலே தனியொருவடிவமாக நின்று, தனித்தமிழ்க் கடவுளாகக் காட்சி தருகின்ற முருகப் ...
Comments
Post a Comment