வாலி+அத்தை மடி மெத்தையடி
வாலியை முதன்மையான திரைக் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காட்டிய, ‘கற்பகம்’ படத்தின் பாடல்.
பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றன. ஆனால் எப்போதுமே புதுமைக்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வராமல் இருக்காதல்லவா!
இணையத்தில் படித்த ஒரு சுவையான சம்பவம்.
சென்னையில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு, வாலியின் நண்பர் வீட்டு கல்யாணத்திற்கு இசை நிகழ்ச்சி நடத்த புகழ் பெற்ற பாடகர் சி.எஸ்.ஜெயராமனையையும் வழிகாட்டியாக வாலியையும் காரில் அனுப்பி வைக்கிறார் இசையமைப்பாளர் ராமமூர்த்தி. ஆனால் வாலியை, ஜெயராமனுக்கு அறிமுகப் படுத்த மறந்துவிட்டாராம்.
காரில்,ஜெயராமன் கச்சேரி பாடலை ஆலாபனை செய்ய அதைக் கேட்ட வாலி, பலே என பாராட்டியிருக்கிறார்.
இருவரும் பரஸ்பரம் பேசும் போது வாலி பாட்டு எழுதுபவர் எனக் கூற, அவர் எழுதிய முருகன் பாடலைக் கேட்டுவிட்டு “இந்த பாட்டு நான் ஏற்கனவே கேட்டிருக்கேன். நீங்க எழுதியதுன்னு தெரியாது. நல்லா எழுதுறீங்க… நீங்க ஏன் சினிமாவில் பாட்டெழுதக் கூடாது? உங்க எழுத்து அர்த்தமுள்ளதாக இருக்கு, நீங்க முயற்சி பண்ணுங்க தம்பி என்பதோடு நிற்கவில்லை…
இப்போ காலம் ரொம்ப கெட்டுப்போச்சி.. விஸ்வநாதன் ராமமூர்த்திகிட்ட யாரோ வாலின்னு ஒருத்தன் அதிகமா பாட்டெழுதுறானாம். ‘அத்தைமடி மெத்தையடின்னு’…என்ன பாட்டு இது! அவன் எழுத்துக்கு உங்க எழுத்து எவ்வளவோ பெட்டெர்” என சொல்லி முடிக்கும்போது திண்டிவனத்தில் டீ பிரேக்கிற்காக கார் நின்றிருக்கிறது.
அப்போது சில இளைஞர்கள் ஓடிவந்து “டேய்… கவிஞர் வாலிடா..” என ஆட்டோகிராப் வாங்கியிருக்கிறார்கள். அதைக் கண்ட ஜெயராமன் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி.. நீங்கதான் வாலின்னு தெரியாம பேசிட்டேன். நீங்களாவது உங்க பெயரை சொல்லியிருக்கலாமே என்றாராம்.
நீங்க கேட்கவே இல்லையே என சிரித்திருக்கிறார் வாலி.
“ஹ்ம்ம்ம்.. காவேரி தண்ணிக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்த்தி” என சிரித்தாராம் ஜெயராமன்.
தேனில் எந்தத் துளி இனிப்பு என்றால் என்ன பதில் சொல்ல முடியும். சுசீலாம்மாவின் அத்தனை பாடல்களும் தேன் துளிகள்தான். ஆயினும்
“லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….”
என்று குழந்தையோடு சேர்த்து நம்மையும் உறங்க வைக்கும் இந்த தாலாட்டுப் பாடலுக்கு என்றுமே தனி இடம்தான்.
————————–
படம்: கற்பகம்
பாடியவர்: P. சுசீலா
கவிஞர்: வாலி
இசை: எம்.எஸ்.வி, ராமமூர்த்தி
—————————–
பாடல் வரிகள்:
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ.
அத்தை மடி மெத்தையடி…
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…..
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
லுலுலு…ஆயி ….ஆரி ….ஆரி ….ஆரி….ஆரி ….ஆராரோ ….
மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண் பாடும்
மான் குட்டி கேட்டு கண் மூடும்
அதை மான் குட்டி கேட்டு கண் மூடும்
ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
வேறோர் தெய்வத்தை போற்றவில்லை
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை
அன்றோர் கோயிலை ஆக்கி வைத்தேன்
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
அதில் அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்
ம்ம்ம்.. அத்தை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அத்தை மடி மெத்தையடீ…
Comments
Post a Comment