Skip to main content

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது


பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது ,நாம் அடிக்கடி கேட்கும் ஒரு பழமொழி. பொதுவாக துணிமணிகள் , நகைகள் வாங்கும் போதும்,வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போது ,அதிகமாக உபயோகப்படும் பழமொழி.

உண்மையில், மாறாக அல்லவோ இருக்கிறது. தங்கம் விலை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டே இருக்கிறது.பொன் கிடைப்பது எட்டாக்கனியாக இருக்கிறது.

வாரத்திற்கு ஒரு முறை புதன் கிழமை வந்து கொண்டு தானே இருக்கிறது.

அர்த்தம் புரியாமல்,உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.

உண்மை என்னவென்று பார்ப்போமா?

பொன் என்பது பொன்னன் என்றும் அழைக்கப் படும் ஜுபிட்டர்(குரு) கிரகம் அதன் பொன்னிற நிறத்தால் அடைந்த பெயர்.
புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றுமொரு கிரகம். நம்முடைய பால் வீதியில்,சூரியனை வலம் வரும் பல கிரகங்களில் இவை இரெண்டும் நம் பழமொழியின் கதா நாயகர்கள்.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் நீள்வட்ட பாதைகள் ஒன்றுக் கொன்று மாறுபடும். சூரியனுக்கு பக்கத்தில் புதன் கிரகம், அடுத்து வெள்ளி,அதற்கு அடுத்து பூமி,அதற்கு அடுத்து செவ்வாய்,அதற்கு அடுத்து குரு என்கிற ஜுபிட்டர் என்கிற பொன் நிறம் கொண்ட பொன்னன் .கடைசியாக சனி.

நாம் ஜுபிடர் ஐயும் மெர்குரி ஐயும் மாத்திரம் இப்போது எடுத்துக் கொள்வோம்.

ஜுபிடரின் (பொன்னன் ) / மெர்குரி (புதன்) வானவியல் அடிப்படைகள் /உண்மைகள்.

சூரியனிடம் இருந்து ஜுபிடர் கிரகத்தின் தூரம் 778300000 கிலோ மீட்டர்./ புதன் தூரம் 57900000 கிலோமீட்டர்.---(Disance )
ஜுபிடர் கிரகத்தின் விட்டத்தின் அளவு 142800 கிலோமீட்டர் ./ புதன் கிரகத்தின் விட்டம் 4878 கிலோமீட்டர் { விட்டம்.( diameter )}

சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் : ஜுபிடர் 11 .86 வருடங்கள். ( 12 வருடம்)
புதன் 88 days .

அதாவது, ஜூபிடரை ,மெர்குரியுடன் ஒப்பிடும் போது, சூரியனில் இருந்து ஜுபிட்டர் 14 மடங்கு தூரத்தில் இருக்கிறது. ஜுபிடரின் உருவம் மெர்குரியின் உருவத்தை விட 29 அளவு பெரியது.

ஜுபிட்டர் 12 வருடத்துக்கு ஒரு முறை சூரியனை சுற்ற ,மெர்குரியோ வருடத்திற்கு நாலு முறை சூரியனை சுற்றுகிறது.
மெர்குரி சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது இது கடினம். மேலும் சுற்றி வரும் தூரம்/ வேகத்தால் நம் கண்களில் படும் நேரம் மிக மிக குறைவு. இதன் உருவமும் சிறியது.

ஆனால்,ஜுபிட்டர் ,உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் /சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் -அதிகம்.
சூரியனை விட்டு மிகவும் தூரத்தில் இருப்பதால் ,சூரிய ஒளியின் தாக்கம் ,புதனை ஒப்பிடுகையில் குறைச்சல். வெறும் கண்களால் சில சமயம் ஜூபிடரை பார்க்க முடியும் ( சமிபத்தில் செப் 23 வெறும் கண்களுக்கு இரவில் தென்பட்டது.) புதனை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.

பொன் (தரிசனம்-கண்ணுக்கு ) கிடைத்தாலும் கிடைக்கும்.
புதன் (தரிசனம் -கண்ணுக்கு) கிடைக்காது.


சமயம் வரும்போது நீங்களும்,இவ்வுண்மைகளை எடுத்துக் கூறி, ஒரு பெரிய "ஓ" வை பெற்றுக் கொள்ளுங்கள்.

ரமணீயன்.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்