இளநீர் வழுக்கை பிடிக்குமா உங்களுக்கு? ஆனா அதை சாப்பிடலாமா? கூடாதானு தெரியுமா?

இளநீர் வழுக்கை பிடிக்குமா உங்களுக்கு? ஆனா அதை சாப்பிடலாமா? கூடாதானு தெரியுமா?


நிறைய மக்கள் தேங்காயை நட்ஸாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அது ஒரு பழம் என்பது உங்களுக்கு தெரியுமா. பொதுவாக இந்தியாவில் இது அதிகமாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இங்குள்ள மக்கள் இதை ஒரு ஆரோக்கியமான உணவாக கருதுகின்றனர்.

தேங்காய் பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் செழித்து வளருகிறது. இதிலிருக்கும் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ஆனால் நிறைய மக்கள் தேங்காயில் உள்ள கொழுப்பின் காரணமாக இதை உடலுக்கு கேடு என்று தவறாக நினைத்து வருகின்றனர்.

தேங்காயை உணவில் சேர்த்து வருவதால் இதயம், சருமம், மூளை மற்றும் வயிறு இவைகள் ஆரோக்கியமாக இருக்கும். இதய ஆரோக்கியம், நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுதல், வயதாகுவதை தடுத்தல், சரும ஆரோக்கியம் போன்றவற்றிற்கு உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் அல்சர், வயிற்றெரிச்சல், காயங்கள் ஆறுவதற்கு, அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் சரி செய்கிறது.

Comments

Popular posts from this blog

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

உத்தரகோசமங்கை...

அன்னம்+காவடி+ஆட்டம்