அம்மாவின் அடையாளம்
அம்மாவின் அடையாளம்

எனக்கு !அழ சொல்லிகொடுத்த
உன் ! கண்ணில் விழும் முன்னே
கண்ணீர் விழ வைத்தேனே.........
வெட்டி தூக்கம் போட்ட வயசுல கூட
வேடிக்க பார்த்து ரசுச்சுருப்ப,
நான் !கீழ விழும்போதெல்லாம் தரையை திட்டி -
தட்டி கொடுத்துருப்பையே மா எனக்கு.........
எனக்கு ! சோறு ஊட்டும் போதெல்லாம்
நீ ! பட்ட பாடு இருக்கே ?
எனக்கு !சோறு ஊட்டுனத விட
நிலாவுக்கு அதிகமா சோறு ஊட்டியிருப்ப........
உன் ! சேலையில தொட்டில் கட்டி
ஆட்டும் பொது உலகத்தையே சுத்தியிருப்பேன்,
நான் ! சேட்டை செஞ்சப்பையெல்லாம் - என்ன
அடிச்சுப்புட்டு , நீ ! உட்கார்ந்து அழுவையே மா..........
காலம் கடந்து போக
கடந்து போனது ,
என் !குழந்தை பருவம்
போனது போகட்டும்...........
வானத்தில் இன்னும் நிலா இருக்கு
சோறு ஊட்டுவையா மா
நிலவுக்கு அல்ல
எனக்கு................
- ச.கௌரி சங்கர்
Comments
Post a Comment