இறமாப்பு
இறுமாப்பு கூடாது... ................................. மாவீரன் அலெக்சான்டர் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றிய போது. ஒரு நாள் மாலை வீதியில் நகர்வலம் வந்துக் கொண்டிருந்தார். அப்போது தன் எதிரே வயதான யோகி வருவதை கண்டு குதிரையிலிருந்து இறங்கி அவரை தலை வணங்கினார். அந்த யோகியின் கண்கள் சாந்தமும், ஒளியும் நிறைந்து காணப்பட்டது. ” உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருகிறேன், என்னுடன் “மெசடோனியா” வந்துவிடுங்கள். உங்கள் வருகையால் என் நாட்டு மக்கள் ஆனந்தம் அடைவார்கள், என் நாடு சுபிற்சம் பெரும்” என்று யோகியை தன் நாட்டிற்கு அழைத்தார் அலேக்சான்டர். யோகியோ, “எனக்கு எதுவும் வேண்டாமய்யா, இந்நாடும், நான் வசிக்கும் காடுகளே எனக்கு போதுமான மகிழ்ச்சியை தருகிறது”, என அமைதியாக கூறினார். தனது வேண்டுகேளை நிராகரித்ததால் கோபம் தலைக்கேரிய அலேக்சான்டர், தன் இடைவாளையுருவி யோகியை நோக்கி பேசலானார், “மடையனே!! நான் யாரென்று தெரியுமா? நான் தான் மாவீரன் அலேக்சாண்டர். என் ஆனையை மறுத்ததற்கு இப்பொழுதே என்னால் உன்னை கொல்ல முடியும், மறியாதையாக நான் சொல்வதை கேள்” என்றார். யோகியோ தைரியமாக, “உங்களால்...